எம்.ஜி.ஆர்-க்கு அடுத்த நடிகர் இவர் தான்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா நீங்களே பாருங்க..!

0

அயலான்
முன்னணி தமிழ் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.அயாலான் டிரைலர் வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டாமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார்.

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவா தான்
இதில் பேசிய சிவகார்த்திகேயன், ’தமிழில் முதன் முதலில் எம். ஜி.ஆர் தான் ஏலியன் படத்தை எடுத்தார். அதன்பின் நான் தான் ஏலியன் படத்தில் நடித்திருக்கிறேன்’ என கூறினார். ’அதற்காக எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று யாரும் எழுதி விடாதீர்கள்’ என்றும் கலகலப்பாக பேசினார்.

சிவகார்த்திகேயன் கூறியது போல் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1963ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கலை அரசி எனும் திரைப்படம் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஏலியன் திரைப்படமாகும்.

இதன்பின் சிவாகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஏலியனை வைத்து தமிழில் எடுக்கப்பட்டுள்ள படம்.ஆர். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து

ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் எ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.