விமான நிலையத்தில் பிரபல முன்னணி நடிகையுடன் நடிகர் அஜித்.. எங்கு சென்றுள்ளார்கள் தெரியுமா..!

0

விடாமுயற்சி
அஜித் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது. அசர்பைஜானில் ஆக்ஷன் காட்சிகளுடன் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.பல நாள் அஜித் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருந்த விஷயம் நாளை நடக்கவிருக்கிறது. 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பவுள்ளார்களாம்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஹுமா குரேஷி, அர்ஜுன், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் அஜித் திரிஷா
முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் நடிகை திரிஷாவும் இணைகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று துபாய் விமான நிலையத்தில் அஜித் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அவர்கள் இருவருடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.