கணவர் வேறு ஒரு பெண்ணுடன்..அந்த நொடி..சம்யுக்தா வாழ்க்கையில் இவ்வளவு கொடுமையா..!

0

சம்யுக்தா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. இதன்பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், நடிகை சம்யுக்தா தனது வாழ்க்கையில் நடந்த கொடுமையான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு கொடுமை
இதில் ‘என்னுடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வந்ததால், நானும் அவருடன் அங்கு தான் இருந்தேன். துபாயில் இருந்த போது, எனது கணவர் வேறொரு பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் உறவில் இருந்தார்.

அவர் அந்த பெண்ணுடன் உறவில் இருந்தது நான்கு ஆண்டுகளுக்கு பின் தான் எனக்கு தெரியவந்தது. இதனால் நான் கொடுமையான வேதனையை அனுபவித்தேன். அதிலிருந்து மீண்டு வர கடும் முயற்சி எடுத்தேன்.

விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவு எடுத்து அனைத்து ஆவணங்களையும் முறையாக அவருக்கு அனுப்பினேன். ஆனால், அவர் இந்தியா வராமல் எனக்கு மன வேதனையை கொடுத்து வருகிறார் என பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.

நடிகை சம்யுக்தா கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.