குடிபோதையால் அரங்கேறிய அ தி ர் ச்சி.. குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி..!

0

பிரபல பாடகி சின்மயி குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியளித்துள்ளது.பாடகி சின்மயி
தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக வலம்வரும் சின்மயி, சமூக வலைத்தளங்களில் அதிரடியாக பல கருத்துக்களை வெளியிடுவதுடன், பெண் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர் ஆவார்.

ராகுல் என்பவரை திருமணம் செய்த இவர் 8 ஆண்டுகளுக்கு பின்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் இவர் குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் விபத்தில் சிக்கியுள்ளார்.

இவர் விபத்தில் சிக்கியதை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுனர் இவரது காரில் வந்து மோதியுள்ளார்.

பின்பு நிற்காமல் ஆட்டோ ஓட்டுநர் எஸ்கேப் ஆகியுள்ளார். ஆனால் தனக்கோ தன்னுடன் இருந்தவர்களுக்கே எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும்

தாங்கள் பத்திரமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.