என் போட்டோ வச்சி அப்படி எடிட் பன்றாங்க..அம்மா அப்பா அதை பார்த்துவிட்டு..வேதனையை பகிர்ந்த நடிகை தீபா..!
தீபா வெங்க
சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தீபா வெங்கட்.அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த ‘பாசமலர்’ என்ற படத்தின் மூலம் திரையில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து உல்லாசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தீபா, சினிமா துறையில் இருந்து விலகி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக மட்டும் இருந்து வருகிறார்.
வேதனை!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தீபா வெங்கட், ” சில யூடியூப் சேனலில் நான் கொரோனாவில் இறந்துவிட்டதாக போட்டோ எடிட் செய்து வீடியோ வெளியிட்டனர். நிறைய யூடியூப் சேனல் இது போன்று செய்கிறார்கள்”.
“இந்த மாதிரியான செய்திகளை பார்த்த அம்மா அப்பா உறவினர்கள் கூட நிறையவே வருத்தப்பட்டார்கள்” என்று தீபா வெங்கட் கூறியுள்ளார்.