தாலி கட்டும் போது நடிகர் ஆதி கேட்ட ஒரு கேள்வி!! பதறிபோன நடிகை நிக்கி கல்ராணி..!
வட இந்திய பெண்ணாக தமிழில் யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி.கடந்த ஆண்டு நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தியும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஆதி அளித்த பேட்டியொன்றில் திருமணத்தன்று தாலிக்கட்டும் போது நடந்த ஒரு விசயத்தை பகிர்ந்துள்ளார்.
தாலிக்கட்டும் சில நிமிடத்திற்கு முன் நிக்கியிடம், உன்கிட்ட ஒரு விசயம் பேசணும் என்று கேட்டதற்கு முகூர்த்த நேரத்தில் அவசர அவசரமாக கூப்பிடுராங்க ஏன் என்ன ஆச்சி என்று பதற்றத்தோடு கேட்டாள் நிக்கி.
சாதாரண பெண்ணை போல் புருஷன் இப்படி இருக்க வேண்டும் இத்தனை மணிக்கு வீட்டுக்கு வரவேண்டும், பிரண்ட்ஸ் கூட வெளியில போகக்கூடாது என்று எல்லாம் சொல்லக்கூடாது என்று கூறினேன்.
அதற்கு நிக்கியும் ஓகே சொன்னதால் தான் தாலி கட்டினேன் என்று ஆதி தெரிவித்துள்ளார். இதை தாலி கட்டும் போது தான் கேட்கணுமா என்று ஆங்கர் ஷாக்கான ரியாக்ஷனுடம் கேள்வியை கேட்க அப்போதான் கேட்க தோணியதாகவும் ஆதி கூறியிருக்கிறார்.