இந்த காலத்தில் இப்படி ஒரு காதலா 59 வயதிலும் அவரை காதலிக்கிறேன்! வெட்கத்தில் சிவந்த நடிகை நளினி ..!

0

தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு சினிமா நட்சத்திரங்கள் காதலிப்பதும் திருமண பந்தத்தில் இணைவதும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதும் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.அந்த வகையில் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த ராமராஜன்- நளினி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.இவர்கள் இருவரும் பிரிந்திருந்த போதிலும் இன்றுவரை ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் தவறாக பேசாமல் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர்.

ஒருதலையாக என்னை காதலித்தார்
எம்.ஜி.ஆர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற இவரின் திருமணம் கடைசிவரை நீடிக்காதமை குறித்து அவர் கவலையுடன் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அவர் பேசுகையில், நான் நடிக்க வந்த போது உதவி இயக்குனராக ராமராஜன் பணியாற்றினார், அவர் ஒருதலையாக என்னை காதலித்து வந்துள்ளார்.படப்பிடிப்புக்கு இடையில் எனக்கு காதல் கடிதங்கள் கொடுப்பார், ஒருநாள் ஆடை அணிந்து வந்த போது ”இது நன்றாக இருக்கிறது, நாளைக்கும் போட்டுட்டு வாங்க” என்று கூறினார். ஏதேச்சையாக நான் அதையே போட்டுக்கொண்டுவர, அவரது காதல் மேலும் அதிகரித்துவிட்டது.

அதன் பின்னர் சில காலம் நான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, சிறிது காலம் கழித்து அவருக்கு கதாநாயகனான நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி இருக்க ஒரு நாள் ஒய்.எம்.சி.ஏவில் நடந்த படப்பிடிப்பில், நான் நடித்துக்கொண்டிருந்தபோது, என்னை அவர் பார்க்க வந்தார்.

அப்போது, என் குடும்பத்தினர் ராமராஜனை அடித்துவிட்டனர். இதில் தான் அவர் மீது காதல் வந்தது.அதன் பினனர் ஒரு வருடமாக எனது அம்மா என்னை சென்னைக்கே அழைத்துவரவில்லை. பின், அந்த 1986ஆம் ஆண்டு முழுக்க நான் மலையாளப் படங்களில் மாத்திரமே நடித்தேன்.பின்,நான் நடித்த மலையாளப் படமொன்று பாலைவன ரோஜாக்கள் என தமிழில் ரீமேக் ஆகிறது. அதன்பின் அதன் படப்பிடிப்புக்காதான் மீண்டும் சென்னை வந்தேன்.

அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் நடிகர்கள், உனக்காக ராமராஜன் இப்போது ஹீரோவா எல்லாம் பண்றார்.இப்படி ஏமாத்திட்டீயேன்னு சொன்னதும் எனக்கு மெராம்ப கவலையாக இருந்தது.இதன் பின், தாய் அவார்டு விழாவில் இருவரும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்பின், குறுக்குத்தெரு என்னும் படப்பிடிப்பின்போது, நடித்த நடிகர் பாண்டியனின் உதவியின் மூலம் இருவரும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்தோம்.எம்.ஜி.ஆர் தலைமையில் 1987-ல் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் எங்களுக்கு அருண், அருணா என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.பின், ஜோதிடத்தில் நாம் வெகுநாட்கள் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாது என இருப்பதாக சொன்னார்.

இவர் சும்மா விளையாட்டுக்குத் தான் சொல்கிறார் என நினைத்தேன் அதேபோல், ஒரு சூழலில் இருவருக்கும் கருத்து முரண்பாடு வந்தது, அப்போதும் சண்டைபோட்டுப் பிரியாமல், மனம் ஒத்தே பிரிந்தோம்.எனது மகளின் திருமணத்திற்கு அவரை அழைத்திருந்தேன். வந்து ஆசிர்வாதம் செய்தார். இப்போதும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என கூறி அனைவரையும் நெகிழ செய்துள்ளார்.ஒன்றாக இருக்கும் போதே ஒருவரையொருவர் குறைகூறி திரியும் இந்த காலத்தில் இப்படியும் காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.