முகம் மாறியது ஏன்? அதை செய்தால் தப்பா: எமி ஜாக்சன் ட்ரோல்களுக்கு பதிலடி..!

0

எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.தற்போது ஆங்கில படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் எமி ஜாக்சன் முகமே மாறி இருக்கும் ஸ்டில்கள் சமீபத்தில் வைரல் ஆனது. அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிகர் Cillian Murphy போல இருப்பதாக விமர்சித்தனர்.

ட்ரோல்களுக்கு பதிலடி
இது பற்றி எமி ஜாக்சன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் ஒரு ஆங்கில படத்திற்காக இப்படி மாறியதாக தெரிவித்து இருக்கிறார்.

“நான் ஒரு நடிகை. என் வேலையை நான் சீரியஸாக தான் செய்கிறேன். நான் UK-வில் நடித்து வரும் படத்திற்காக ஒல்லியாக வேண்டி இருந்தது. என்னை பற்றி இணையத்தில் வரும் விமர்சனம் சோகத்தை தருகிறது.”

“பல நடிகர்கள் படங்களுக்காக அவர்களது தோற்றத்தை மாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாராட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு நடிகை அதை செய்தால் இப்படி விமர்சிகிறார்கள்” என எமி ஜாக்சன் தெரிவித்து இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.