போன் மூலம் உதவி கேட்ட தாய், நேரிலேயே சென்று உதவிய KPY பாலா-மகிழ்ச்சியில் ரசிகர்கள் நெகிழ்ச்சியான சம்பவம்..!

0

KPY பாலா
பெரிய பணக்காரர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை தாண்டி மனம் இருந்தால் எந்த வகையில் சாதாரண மனிதன் கூட உதவி முடிவும் என்பதை காட்டி வருகிறார் KPY புகழ் பாலா.படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் ஷோக்கள் என நிறைய கலந்துகொண்டு சம்பாதிக்கும் பாலா அதை வைத்து ஆடம்பரமாக வாழ நினைக்காமல் மற்றவர்களுக்கு உதவி வருகிறார்.

அண்மையில் மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் 2 ஆம்புலன்ஸ் மற்றும் முதியோர் இல்லத்துக்கு ஒரு ஆம்புலன்சும் வாங்கி கொடுத்தார். பல மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்.

புதிய வீடியோ
இந்த நிலையில் பாலாவிற்கு ஒரு தாய் தனது மகள் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது,

அவள் குறித்த வீடியோவை உங்களது பக்கத்தில் போட முடியுமா, அதனால் தனது மகளுக்கு உதவுகள் வரும் என கேட்டுள்ளார்.

உடனே பாலா வீடியோவை தனது பக்கத்தில் போதுவதை தாண்டி அவர்களது வீட்டிற்கே சென்று ரூ. 1 லட்சம் கொடுத்ததோடு அவர் பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தானே ஏற்று கொள்வதாக கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.