மாரிமுத்துவிற்கு அதெல்லாம் தெரியாது, ஆனால்- கண்ணீர் மல்க அவரது மனைவி கொடுத்த பேட்டி சோகத்தில் ஆழ்த்தியது..!

0

நடிகர் மாரிமுத்து
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது பழமொழி, இந்த பழமொழிக்கு ஏற்றவாரு ஒரு நடிகருக்கு சோகம் நடந்துள்ளது.30 வருடமாக சினிமாவில் இருந்தாலும் ஒரு வளர்ச்சியையும் காணாத பிரபலம் ஒரே ஒரு சீரியல் ஓஹோ என்ற வாழ்க்கை வாழ்ந்தார்.அப்போது தான் தனது சினிமா பயணத்தின் மொத்த வளர்ச்சியையும் அனுபவித்தார், அதனை முழுவதும் அனுபவிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

மாரிமுத்து அவர்களுக்கு இப்படியொரு சோகம் நடந்திருக்க கூடாது என்பது மக்கள் அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

மனைவியின் பேட்டி
அண்மையில் மாரிமுத்துவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரது மனைவி பாக்கியா பேசும்போது, மாரிமுத்து மறைவு செய்தி கேட்டு பேச முடியாத, காது கேட்காத ஒருவர் எங்களது வீட்டி முகவரி மட்டுமே வைத்துக்கொண்டு வந்தார்.

அவரைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. என் கணவர் சம்பாதித்த உள்ளங்களை பார்த்து வியந்தோம்.அவருக்கு உணவு கொடுத்து, கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம்.

அவரை கண்டதும் மாரிமுத்துவே எங்களை காண வந்தார் எனக்கு தோன்றியது. அவருக்கு பரிசு கொடுத்து அன்பை வெளிக்காட்ட எல்லாம் தெரியாது. ஆனால் அவருக்கு நாங்கள் மூவர் மட்டுமே உயிர், எங்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றுள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.