இரு மனைவிகளுடன் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட நடிகர்: ஆசையாய் கட்டிய வீட்டை பார்த்து இருக்கீங்களா?

0

நடிகர் விஜயகுமார் தனக்கு தானே சிலை வைத்து ஆசையாய் கட்டிய வீட்டை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து வைரலாக்கி வருகிறார்கள்.நடிகர் விஜயகுமார்
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் சினிமாவில் பல வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து பலரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டவர் தான்.தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட விஜயகுமார்அக்னி நட்சத்திரம் என்றத் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகராக மாறினார் விஜயகுமார். இவர் சினிமாவில் கதாநாயகனாக, வில்லனாக பல முகங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளும், இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா, அருண்விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சினிமாவில் இருந்து தங்களுக்கு என ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து குடும்பம், பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள்.

விஜயகுமாரின் வீடு
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகும் செய்திகளில் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று. அந்தவகையில் இன்று விஜயகுமார் ஆசை ஆசையாக கட்டிய வீட்டின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

 

நடிகர் விஜயகுமார் பிறந்து வளர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாட்டுச் சாலை என்ற கிராமத்தில் சொந்த வீடு இருந்த அதே இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டப்பட்டிருக்கிறார்.

 

இந்த வீட்டில் கிட்டத்தட்ட 10 படுக்கையறைகளுக்கு மேல் வைத்து கட்டப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டிற்கு முன்பு தன் அம்மா, அப்பாவின் சிலையும் விஜயகுமார் தன் இரு மனைவிகளுடன் இருக்கும் சிலையையும் வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.