திரைத்துறையில் மற்றுமொரு மரணம்: 30 வருடமாக உயிருக்கு போராடிய நடிகர் மரணம்!

0

என் உயிர் தோழன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நடிகர் பாபு, தனது 60 வயதில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.நடிகர் பாபு
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த பாபு, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுயிர் தோழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்குப் பிறகு பெரும் புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நடிகர் பாபு மரணம்மனசார வாழ்த்துங்களேன் என்ற திரைப்படத்தில் இடம் பெறு் ஒரு சண்டைக் காட்சியை அப்படியே தத்ரூபமாக நடிப்பதாக சொல்லி டூப் போடாமல் மாடியில் இருந்து குதித்திருக்கிறார்.

ஆனால் நிலை தடுமாறி தவறுதலாக வேறு இடத்தில் குதித்த போது அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியிருக்கிறது. இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோதும் அது பலனளிக்காமல் போனது.

இந்நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் படுத்த படுக்கையாக இருந்த இவர் கடந்த சில நாட்களாக அவரின் உடல் நிலை மோசமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

தொடர் சிகிச்கை அளிக்கப்பட்டு அது பலனளிக்காமல் நேற்று இரவு அவர் உயிர் அவரை விட்டு பிரிந்திருக்கிறது. இவரின் இறப்பிற்கு பல திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.