மீனாவின் பிறந்தநாளைக் கொண்டாட நள்ளிரவில் வீட்டிற்கு படையெடுத்த நடிகைகள் : வைரலாகும் வீடியோ..!

0

நடிகை மீனாவின் 47ஆவது பிறந்த தினத்திற்கு சப்ரைஸாக அவரின் வீட்டிற்கு சென்று கொண்டாடியிருக்கிறார்கள் பிரபல நடிகைகள்.நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா. இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.

இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார். சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். மீனாவில் கணவர் கடந்த வருடம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். கணவன் இறப்பிற்கு பிறகு வெளியில் வந்து சில சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள்
இன்றைய தினம் நடிகை மீனா 47ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபல நடிகைகளான சினேகா, அனிதாவிஜயகுமார், ரேணுகா பிரவின் என பலரும் இரவு 12 மணிக்கு சென்று சப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

மேலும், பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Meena Actress (@meena_actress_)

Leave A Reply

Your email address will not be published.