மோசமான கமெண்ட்ஸுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்.. வைரலாகும் வீடியோ..!

0

திருமணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் தான் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொண்டார்.கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர்.ஆனால், பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.சி சேனலுக்கு அசோக் செல்வன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

பதிலடி கொடுத்த அசோக்
இந்த பேட்டியில், ‘வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பு இருந்தால் அழகு இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை.

வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு இல்லை. இது மிகவும் தவறான பார்வை’ என பேசியுள்ளார்.இதோ அந்த முழு வீடியோ..

Leave A Reply

Your email address will not be published.