கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித் ..!! 23 வருடங்கள் கழித்து உண்மையை சொல்லிய மாமனார் ..!! இப்படியொரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ..!

0

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் அஜித் குமார் . ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்த அஜித் பின்னர் கடந்த 2000 ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் .

இப்படி இருக்கும் நிலையில் கல்யாணம் ஆகும் போது கொடுத்த வாக்கை அஜித் காப்பாற்றி விட்டார் என்று 23 வருடங்களுக்கு கழித்து பேசி உள்ளார் அஜித்தின் மாமனார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , அஜித் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஸ்பீடு தான் .

இதனால் காதலிக்கும் போதே குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து போன் கேட்டார். பின்னர் இருவருக்கும் ஜாதகம் சரி வருகிறதா என்று பார்த்தோம் .ஆனால் பத்து பொருத்தம் பக்காவாக இருந்தது . இதிலேயே தெரிந்தது இவர்கள் இருவரும் எந்த அளவிற்கு காதலிக்கிறார்கள் என்று.

மேலும் உங்களுடைய பெண்ணை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று எனக்கு வாக்கு கொடுத்திருந்தார் அஜித் . அப்படி ஷாலினிக்கு திருமணமான போது நாங்கள் எல்லாம் எப்படி சந்தோசமாக இருந்தோமோ , அதே போன்று தான் இப்போதும் இருந்து வருகிறோம் .

அந்த அளவிற்கு என்னுடைய மகளையும் , எங்களுடைய குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார் அஜித் . இன்னும் சொல்லப்போனால் அவர் எனக்கு மருமகனே கிடையாது, இன்னொரு மகன் என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகை ஷாலினியின் அப்பா…

Leave A Reply

Your email address will not be published.