சுந்தரபாண்டியன் பட நடிகையா இது என்ன இப்படி மாறிட்டாங்க !! அதுவும் கல்யாணமாகி இவருக்கு இவ்வளவு பெரிய மகள் வேற இருக்கா !!
திரையுலகில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி அந்த படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் தங்களது நடிப்பின் மூலம் பலத்த பிரபலத்தை பெற்று அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றனர். சொல்லபோனால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பத்தில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்றைக்கு பிரபலமாக உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் தமிழில் வெளிவந்த சுந்தர பாண்டியன், ரம்மி, காவலன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில்
நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஜானகி தேவி. இவர் தற்போது வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் வெளியாகும் பிரபல முன்னணி தொடர்களான கயல், திருமகள் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் சமீபத்தில் தனியார் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் தனது திரையுலக வாழ்க்கை பற்றியும் அதில் தான் அனுபவித்த பல இன்னல்களையும் வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் நான் மீடியாவில் நடிக்க செல்கிறேன்
என சொன்னவுடன் எனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டாம் என மறுத்தார்கள் இருந்தும் எனது கட்டாயத்தின் பேரில் பல போராட்டங்களுக்கு பின்னர் தான் சினிமாவில் நடிக்க வந்தேன். மேலும் அப்போது எனது குடும்ப சூழ்நிலை மிகவும் சிரமமான நிலையில் இருந்ததால் எங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் தான் படிக்க முடியும் எனும் நிலை வந்ததை அடுத்து நான் படிப்பை பாதியிலேயே நிறுத்தி எனது தம்பியை படிக்கவைத்தேன். எனக்கு ஆரம்பத்தில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தான் கிடைத்தது மேலும் எனக்கு அதிகம் வில்லி கதாபாத்திரம் தான் கிடைத்தது. இதனால் எனது கணவரின் தாயார் என்னை
இவ நம்ம குடுபத்துக்கு ஏத்தவல என பலத்த விசாரணைக்கு பின்தான் என்னை ஏற்று கொண்டார்கள். இது ஒருபுறம் இருக்க பொதுவாக சினிமாவில் நுழைய வேண்டும் என்றாலே நாம் பல அட்ஜஸ்ட்மென்ட்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆண் நம்மிடம் எப்படி பழகுவார் என்பது நன்றாகவே தெரியும்.
இவ்வாறு சமூகத்தில் சினிமாவில் நடிக்கவரும் பெண்களுக்கு இழைக்கப்படும் பல இன்னல்கள் குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார் மேலும் இதையடுத்து தனது இணைய பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போயுள்னர்.