திருமணத்திற்கு முன் குழந்தை… 43 வயதில் விவாகரத்து: கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை என்ன தெரியுமா..!

0

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் காதலித்து குழந்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்துக் கொண்ட காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக நடித்து வந்தவர்தான் இவர். அக்காலத்தில் பல நடிகைகளுடன் பல கிசு கிசு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.

கமல்-சரிகா காதல் கதை
கமல்ஹாசன் முதலில் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரிகாவும் கமலும் சினிமாவில் இருக்கும் போது காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள். ஆரம்பத்திலிருந்து பல கஷ்டங்களை பார்த்து வந்த சரிகாவிற்கு கமலின் அன்பு, காதலும் ஆறுதலாக மாறியது.இதனால் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் ஸ்ருதி. குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது இரண்டாவது குழந்தையாக அக்ஷராவும் பிறந்தார்.

அப்போது தான் குழந்தைகள் பிறந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என்று எண்ணி 1988ஆம் ஆண்டு சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்கள். கமலின் மீது இருந்த காதலால் எல்லாவற்றையும் விட்டு வந்த சரிகா தன் 43ஆவது வயதில் கமலின் காதலை வெறுத்து விவாகரத்து செய்து விட்டார்.2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். ஆனால் கமல் தன் இரு மகள்களுடன் எப்போதும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.