3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?

0

மாரிமுத்து
எதிர்நீச்சல் தொடரையே தனது கம்பீரமாக நடிப்பாலும், பேச்சாலும் மக்களை அனைவரையும் கட்டிப்போட்டவர் மாரிமுத்து. ஏமா ஏய் என கூறி ரசிகர்களை வசியம் செய்துவந்த இவர் இப்போது நம்முடன் இல்லை.35 வருடமாக சினிமாவில் இருந்தாலும் எதிர்நீச்சல் தொடர் தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அந்த தொடருக்கான டப்பிங்கில் இருந்தபோது தான் மாரடைப்பு ஏற்பட்டு மறைந்துள்ளார்.

சீரியலிலும் அவருக்கான கடைசி காட்சி வர ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

நடிகரின் ஆசை
நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு இல்லத்தை கட்டியிருக்கிறார்.வீட்டில் சில முக்கிய விஷயங்களின் வேலைகள் நடப்பதாகவும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடக்கும் என்றும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதேபோல் தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி வைத்து திறக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளாராம்.

இந்த தகவலை இப்போது ஆகி குணசேகரனாக நடிக்க இருக்கிறார் என கூறப்படும் வேலராமமூர்த்தியிடம் மாரிமுத்து அவர்களே கூறியிருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.