சென்னை விமான நிலையத்தில் சிம்பிளாக வந்திறங்கிய விஜய்: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த வீடியோ..!
அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய விஜய்யின் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.சென்னை விமான நிலையத்தில் விஜய்இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது இரண்டு படங்களை கைவசம் வைத்துக் கொண்டு நடித்து வரும் விஜய். திரைப்பட பணிகளுக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.
ஆனால் திரைப்பட பணிகள் முடிந்தும் சென்னை வராமல் அங்கேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்.
அவர் சென்னை விமானம் நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
Thalapathy spotted at Airport✈️ 👀🔥#Leo @actorvijay pic.twitter.com/EPlD8HbVPt
— 𝐊𝐨𝐬𝐚𝐤𝐬𝐢 𝐏𝐚𝐬𝐚 𝐏𝐮𝐠𝐡𝐚𝐳𝐡™🎯 (@pughazh58) September 12, 2023