திருமணத்தன்று நடிகர் மாரிமுத்து எப்படியிருந்தார் தெரியுமா? வை ர லா கும் அரிய புகைப்படம்..!

0

சீரியலில் கம்பீரமாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், உயிர் பிரியும் முன்பு நடந்த விடயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ… இந்தாம்மா… என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

திருமணத்தன்று மனைவியுடன் மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து தனது சொந்த ஊரான தேனியிலிருந்து சினிமா வாய்ப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வெளியேறும் போது தன்னை தனது தாய் அதிகமாக தேடுவார் என்று கரியால் சுவற்றில் எழுதி வைத்துவிட்டு வந்தாராம்.

பின்பு சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு இவர் இயக்குனராக வலம்வந்தார். அதன்பின்பு இவரை மக்களிடம் கொண்டு சென்றது என்றால் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தான்.சீரியலில் கரடுமுரடாக இருக்கும் இவர் வீட்டில் குழந்தைகளை இதுவரை அடித்ததே கிடையாதாம். எம்டன் மகன், சந்தோஷ் சுப்பிரமணியத்தில் இருக்கும் தந்தையாக தனது மகனுக்கு வலம்வந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமணத்தன்று மாலை வேலையில் தனது மனைவியுடன் சொந்த ஊரில் மொட்டை மாடி ஒன்றில் புகைப்படம் எடுத்துள்ளதை கடைசி வரை மறக்கமுடியாத புகைப்படமாக வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.