ஜென்டில்மேன் திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார் தெரியுமா தெரியுமா.? அதுவும் இந்தக் காட்சியில்தான் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

தென்னிந்திய சினிமாவை பொறுத்த போதிலும் திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அவர்களை காட்டிலும் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும். அந்த வகையில் அந்த காலத்தில் பல நடிகர்கள் வில்லத்தனத்தில் படங்களில் கலக்கியதோடு பல மக்களின் மனதிலும் தங்களது சிறந்த நடிப்பால் அவர்களை மிரட்டியுள்ளனர் அவர்களை பார்த்தாலே மக்கள் மிரண்டு போகும் அளவிற்கு நடித்து பலத்த வரவேற்பை பெற்றுள்ளனர். இருப்பினும் இவ்வாறு பல முன்னணி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் தற்போழுது திரைப்படங்களில் தங்களது வில்லத்தனத்தை முழுவதும் தவிர்த்து காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடூர வில்லனாக நடித்து வந்த பல நடிகர்கள் இப்பொழுது காமெடி நடிகராக நடித்து வருகிறார், அந்த வகையில் ஆனந்தராஜ், பொன்னம்பலம், மன்சூரலிகான் ஆகியோர்களை கூறலாம்.

இந்த நிலையில் காமெடியனாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் ராஜேந்திரன், இவரை ராஜேந்திரன் என்றால் பலருக்கு தெரியாது ஆனால் மொட்டை ராஜேந்திரன் என்றால் அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கரகர குரல் தான் மொட்டை ராஜேந்திரன் அவர்களுக்கு அடையாளம்,ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவுக்கு டுப் மேனாக. தான் நடித்து வந்தார் சினிமாவில் இவர் முகம் தெரிவதற்கு முன்பே பல ஹீரோக்களுக்கு டூப் போட்டுள்ளார்.

அதன் பிறகுதான் சண்டை காட்சிகளில் பைட்டராக நடிக்க ஆரம்பித்தார். இவர் டூப் மேனாக இருந்த பொழுது கேரளாவில் ஒரு படப்பிடிப்புக்காக சென்றுள்ளார் அப்பொழுது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்ற காட்சியில் அப்படியே கழிவுநீரில் குதித்து விட்டார் மொட்டை ராஜேந்திரன்.

அதன் பின்னர்தான் மொட்டை ராஜேந்திரன் உடலில் முடி அனைத்தும் கொட்டிப் போய் குரலும் மாறி விட்டது, எவ்வளவோ மருத்துவம் செய்தும் தன்னுடைய குரலையும் முடி கொட்டுவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் தற்பொழுது மொட்டையும் கரகர குரலும் தான் ராஜேந்திரனுக்கு பிளஸ் ஆக மாறிவிட்டது.

ஏனென்றால் தற்பொழுது அவருடைய கரகர குரலும் மொட்டையும் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது இந்த நிலையில் இவர் முன்பே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுவும் தலை முடியுடன் நடித்து உள்ளார் அந்த வகையில் சங்கர் இயக்கத்தில் கவுண்டமணி அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைபடம் ஜென்டில்மேன், இந்த திரைப்படத்தில் ஒரு ச ண் டை க் காட்சியில் பைட்டர் ஆக நடித்துள்ளார்.அதன் புகைப்படம் தற்போது வை ர லா கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.