பிரபல இசையமைப்பாளர் கார் வி ப த்தில் பலி.. அ-தி-ர்-ச்-சியில் திரையுலகினர்..!

0

மலையாள இசையமைப்பாளர் ஒருவர் தனது காரில் நண்பர்களுடன் சென்னை திரும்பிய போது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுது்தியுள்ளது.இசையமைப்பாளர் தஷி
தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தான் தஷி என்ற சிவகுமார். இவர் ‘ஒத்த வீடு’ ’ஆடவர்’ ’சாதனை பயணம்’ போன்ற தமிழ் படங்களுக்கும் ஏராளமான மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன் கேரளாவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அப்பொழுது காரின் டயர் திடீரென வெடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிரைவர் மட்டுமின்றி இசையமைப்பாளர் தஷியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவருடன் சென்ற நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிசசை பெற்று வருகின்றனர். 50 வயதான தஷி தந்தாரா என்ற மலையாள படத்திற்கு இசையமைத்து சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதை பெற்றுள்ளார்.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தி ஆல்பங்களும் இசையமைத்துள்ள இவருக்கு தமிழ், மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.