காபி, டீ எல்லாம் கொடுக்க கூடாது, அதை குடுங்க.. கறாராக சொன்ன விஜயகாந்த்..!
நடிகர் விஜயகாந்த் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர். கிராமத்து மக்களையும் அதிகம் கவரும் வகையில் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் அரசியலில் குதிததார்.இருப்பினும் உடல்நலம் பாதித்த காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை பெற்று தான் வருகிறார் அவர். அவரது நிலையை பார்த்துகலக்கத்தில் இருக்கும் ரசிகர்கள், விஜயகாந்த் பழைய நிலைக்கு வர பிராத்தித்து வருகின்றனர்.
உணவு விஷயத்தில் கரார்
விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் செல்லும்போது அங்கு எல்லோருக்கும் வழங்கப்படும் உணவு குறித்து கராராக இருப்பாராம்.
எவ்வளவு கேட்டாலும் உணவு வழங்கவேண்டும், காபி எல்லாம் கொடுக்கக்கூடாது, பூஸ்ட் – ஹார்லிக்ஸ் தான் கொடுக்க வேண்டும், மாலையில் நல்ல ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என கூறுவாராம் விஜயகாந்த்.
இதனால் சமாளிக்க முடியவில்லை என தயாரிப்பாளர் சென்று கேட்டபோது, அதற்காக ஆகும் செலவு எவ்வளவு என கேட்டாராம் விஜயகாந்த்.
இரண்டு முதல் மூன்று லட்சம் வரை ஆகும் என சொன்னதற்கு, அதை என் கணக்கில் எழுதி கொள்ளுங்கள் என கூறினாராம் விஜயகாந்த். அதை அந்த தயாரிப்பாளரே தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.