11 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சியா? விக்கி- நயனின் குழந்தைகளை வைத்து வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!
அண்மையில் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடி சில புகைப்படங்களை வெளியிட்ட நயன் தம்பதிகளை வைத்து வம்பிழுத்து வருகிறார்கள் இணையத்தளவாசிகள்.நயன்தாரா – விக்னேஷ் சிவன்
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.
விக்கி-நயனின் குழந்தைகளை வைத்து வம்பிழுக்கும் நெட்டிசன்கள்நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.குழந்தைகளை வைத்து வம்பிழுக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் தன் முதல் குழந்தையுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி குடும்பமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள் நயன்-விக்கி தம்பதியினர்.
இவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வம்பிழுத்து வருகிறார்கள். அதாவது, நயன்-விக்கி தம்பதிகள் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் திகதி இரட்டைக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த இரட்டைக் குழந்தைகள் 11 மாதத்தில் எப்படி வளர்ந்து விட்டார்கள்? குழந்தைகள் வேகமாக வளர ஏதாவது மருந்து கொடுத்துள்ளீர்களா இல்லை மெஷின்ல எதுவும் போட்டு வளர்க்குறீர்களா? என பல கேள்விகளைக் கேட்டு வம்பிழுத்து வருகிறார்கள்.
View this post on Instagram