முதல் சந்திப்பில் மனதைப் ப றி கொடுத்த ரஜினி: சினிமாவை மிஞ்சிய க்யூட் லவ் ஸ்டோரி..!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் ரஜினியின் காத ல்  கதை தற்போது இ ணை யத் தில்   வைரலா கி வருகின்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த்.அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார். ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார்.முதல் சந்திப்பில் மனதைப் பறிகொடுத்த ரஜினிகுடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார். மேலும், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.

சூப்பர் ஸ்டாரின் லவ் ஸ்டோரி
சினிமாவில் பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக சுற்றி வந்துக் கொண்டிருந்த ரஜினி. அந்த நேரத்தில் அவரிடம் புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற திரைப்படங்கள் வரிசையாக இருந்தது.

அந்த சமயத்தில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த லதா ஒய்.ஜி. மகேந்திரனின் அவர்களின் உதவியால் ரஜினி காந்தை நேர்காணல் ஒன்று எடுக்க சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில் ரஜினி படப்படிப்பில் பிஸியாக இருந்ததால் லதாவிற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டும் தான் நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திற்குள் அவர் நேர்காணல் எடுத்து முடிக்க வேண்டும். ஆனால் அவர் 2 மணித்தியாலத்திற்கு பேசியிருக்கிறார்கள்.நேர்காணல் முடிந்து லதா செல்ல இருக்கும் போது அவரை கூப்பிட்டு உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஒரே சந்திப்பில் காதலை சொல்லியிருக்கிறார் ரஜினி.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லதா ரஜினியின் குணத்தைப் பார்த்து அவருக்கும் பிடித்துப் போக சம்மதம் தெரிவித்திருக்கிறார் அதன் பின் லதா வீட்டிற்கு வந்து முறைப்படி பெண் கேட்டவும் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு முதல் சந்திப்பில் காதலைப் பறிமாறிக் கொண்ட இந்த கா த லர் கள் 1981ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.இந்த தம்பதிகளுக்கு தற்போது ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.