சந்திரலேகா சீரியல் நடிக ஸ்வேதாவா இது? தல அஜித்தோடு நடித்திருக்கிறாரா? அடடே இந்தப்படமா? வைர லாகும் புகைப்படம்..!
முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அதிலும் சன் டிவியில் சின்னதாக ஒரு சீரியலில் தலைகாட்டி விட்டாலும் அவர்கள் ரொம்பவே பேமஸ் ஆகிவிடுவார்கள்.
அந்தவகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலின் மூலம் பேமஸ் ஆனவர்தான் ஸ்வேதா பண்டிட். இவர் சினிமாவிலும் சின்ன, சின்ன கேரக்டர்கள் செய்துள்ளார். அங்கிருந்துதான் சீரியல் பக்கம் வந்தார்.
சென்னையில் கல்லூரி படித்த இவர் ஆரம்பத்தில் சில விளம்பரப் படங்களில் தான் நடித்தார். அதன் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டு தல அஜித் நடித்த ஆழ்வார் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு தங்கையாக ஸ்வேதா நடித்திருந்தார்.
தொடந்து கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் சத்யாவுக்கு ஜோடியாக வள்ளுவன் வாசுகி படத்தில் அம்மணி ஹீரோயினாகவும் நடித்தார். அந்தப்படம் பிளாப் ஆகவே தொடர்ந்து துணை நடிகையாகவும் வலம் வந்தார். இதுவரை 9 படங்களில் நடித்திருகும் ஸ்வேதா கடைசியாக ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்திலும் சின்ன ரோல் செய்து இருந்தார்.
இப்போது சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் அம்மணி உதயகிருஷ்ணா நெய், சிந்தால் சோப் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவியில் சந்திரலேகா சீரியல் வெற்றிகரமாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.