குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை.. மறைந்த காமெடி படநடிகரின் மனைவி ககுழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை… மறைந்த காமெடி நடிகரின் மனைவி கதறல்.!

0

மா ர டை  ப்பினால் உ யி ரி  ழ  ந்த பிரபல நடிகரின் பவுன்ராஜின் மனைவி தனது குழந்தைக்கு பிஸ்கட் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.நடிகர் பவுன்ராஜ்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் பவுன்ராஜ்.

மறைந்த நடிகர் பவுன்ராஜ் பொன்ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவரை பிரபலமாக்கியது என்றால் ரஜினி முருகன் திரைப்படத்தில் உள்ள வாழைப்பழ கொமடி தான். இப்படத்தில், “மதுரைக்காரனுக்கு கையே கத்தி விரலே வீச்சிடா என்ற வசனத்தை பேசியிருந்தார்.

இவர் கடந்த 2021ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மா ர டை ப் பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் கூட வாங்க பணம் இல்லை என்று அவரது மனைவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கணவர் இறந்த பின்பு குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என்றும், வீட்டு வாடகையும் கொடுக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டுள்ளார்.

யூடியூபர் ஒருவர் தனது முகத்தை வெளியே காட்டாமல் ஹெல்மெட் அணிந்து உதவி செய்து வரும் நிலையில், அவரிடம் பவுன்ராஜின் மனைவி உதவி கேட்டுள்ளார்.தற்போது குறித்த நபர் செய்த உதவியால் சிறிய கடை ஒன்றினை வைத்து தங்களை பார்த்துக் கொள்வதாகவும், குறித்த நபருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.